இந்தியா

ஹஜ் பயணம் செல்வோருக்கு 2வது டோஸ் தடுப்பூசி கட்டாயம்! ஹஜ் கமிட்டி அறிவிப்பு!

Published

on

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் பயணம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செய்வதற்காக பலர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

வரும் ஜூன் மாதம் மத்தியில் சவுதி அரேபியாவில் உள்ள ஹஜ்க்கு பயணம் செய்ய ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஹஜ் பயணம் செல்வோருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஏற்கனவே தகவல் வெளி வந்த நிலையில் தற்போது ஹஜ் பயணம் செல்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

ஹஜ் பயணம் செல்பவர்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டால் மட்டும் போதாது என்றும் இரண்டு தவணைத் தடுப்பூசியும் போட்டவர்களுக்கு மட்டுமே ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் மத்தியில் சவுதி அரேபியா ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version