சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் ‘வாத்தியார்’ கூட்டணி!

Published

on

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஏ வெங்கடேஷ் பல திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் அவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்று ’வாத்தியார்’. தயாரிப்பாளர் பழனிவேல் என்பவரின் தயாரிப்பில் உருவான இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த 2006ஆம் ஆண்டு இந்த படம் வெளிவந்த நிலையில் தற்போது ’வாத்தியார்’ படத்தின் தயாரிப்பாளர் பழனிவேல் மற்றும் இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மதியம் 12,27 மணிக்கு வெளியாக இருப்பதாகவும், அதில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் வெங்கடேஷ் ஏற்கனவே விஜய் நடித்த ’பகவதி’ சரத்குமார் நடித்த ’சாணக்கியா’ அருண் விஜய் நடித்த ’மாஞ்சா வேலு’ உள்பட பல படங்களை இயக்கியவர் என்பதும் ‘அங்காடித்தெரு’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version