சினிமா

வாத்தி இயக்குநர் என்ன தில் ராஜு மாதிரி பேசுறாரு? நம்பிப் போலாமா!

Published

on

தனுஷின் வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17ம் தேதியான நாளை வெளியாகிறது. படத்தை பார்த்து விட்டு முதல் விமர்சனம் என சொல்லும் பிரபலங்கள் எல்லாம் வாத்தி படத்தை ஆஹா ஓஹோன்னு வழக்கம் போல பெயிட் ரிவ்யூவர்கள் போல சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

எல்லோரையும் விட வாத்தி படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மோடுக்கு சென்று பேசிய பேச்சு ரசிகர்களை சற்றே பீதியடைய வைத்துள்ளது.

#image_title

சமீப காலமாக வெளியாகும் பல பெரிய படங்களே ஒரு வாரம் அல்லது 2 வாரங்கல் தியேட்டரில் தாக்கு பிடிக்கவே தடுமாறி வருகின்றன. இந்நிலையில், வாத்தி திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் கன்ஃபார்மா 4 வாரங்கள் ஓடும் என்றும் தமிழ்நாட்டில் அடிச்சி சொல்றேன் 8 வாரம் வாத்தி படம் ஓடும் எனக் கூறியுள்ளார்.

முதல் மூன்று நாட்கள் ஓடினாலே பல நூறு கோடி வசூல் என அறிவித்து வெற்றி விழா கொண்டாடி வரும் சூழலில் வெங்கி அட்லூரி இந்த உருட்டு உருட்டுறாரே உண்மையாகவே வாத்தி படத்தில் அப்படியொரு ஸ்டஃப் இருக்கா இல்லை ரசிகர்களை முதல் நாள் தியேட்டருக்கு வரவழைக்க பேசிய பேச்சா என ட்ரோல்கள் பறக்கின்றன.

ஏற்கனவே வாத்தி இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் மாதிரி எக்ஸ் லவ் பற்றி தனுஷ் பேசியதை பல வாத்தியார்கள் கண்டித்து வரும் நிலையில், நாளை வெளியாகும் படத்தின் ரிசல்ட் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

 

Trending

Exit mobile version