சினிமா செய்திகள்

Vaathi Trailer: “கல்வி-ல கிடைக்கிற பணம் அரசியல்- ல கிடைக்காது” ரிலீசான வாத்தி படம் ட்ரெயிலர்…!

Published

on

’திருசிற்றம்பலம்’ ‘நானே வருவேன்’ வெற்றிக்குப் பிறகு தனுஷ் தற்போது ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளர்.

இந்நிலையில் வாத்தி படத்தின் தயாரிப்பின் நிறுவனம் படத்திலிருந்து தனுஷின் புகைப்படத்துடன், வாத்தி படத்தின் டிரெய்லர் தேதியை பிப்ரவரி 8ம் தேதியாக அறிவித்திருந்தது. அதேப்போல் நேற்று மாலை 6.30 க்கு வெளியானது வாத்தி படம் ட்ரெயிலர்.

கல்வி அரசியலை கேள்வி கேட்கும் வகையில் இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது. ‘கல்வில கிடைக்கற காசு அரசியல்ல கிடைக்காது’போன்ற வசனங்கள் கவனமீர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

வாத்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ஸ்வேதா மோகன் பாடிய ‘வா வாத்தி’ பாடல் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து செகண்ட் சிங்கள் பாடலான ‘நாடோடி மன்னன்’ பொங்கல் ஸ்பெஷல் பாடலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வாத்தி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.படத்தில் வரும் கலங்குதே, ஒன் லைஃப், சூர்ய பறவைகளே ஆகிய மற்ற மூன்று பாடல்களும் கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்ற வாத்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியானது.

தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகவுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version