விமர்சனம்

Vaathi Twitter Review: வாத்தி தனுஷ் எப்படி… ட்விட்டர் விமர்சனம் இதோ!

Published

on

’திருசிற்றம்பலம்’ ‘நானே வருவேன்’ வெற்றிக்குப் பிறகு தனுஷ் தற்போது ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளர். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளர்.

கல்வி அரசியலை கேள்வி கேட்கும் வகையில் இந்த படத்தின் ட்ரெய்லர் அமைந்திருந்தது. ட்ரெய்லரில் இடம்பெற்ற, ‘கல்வில கிடைக்கற காசு அரசியல்ல கிடைக்காது’போன்ற வசனங்கள் கவனமீர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

வாத்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான ஸ்வேதா மோகன் பாடிய ‘வா வாத்தி’ பாடல் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து செகண்ட் சிங்கள் பாடலான ‘நாடோடி மன்னன்’ பொங்கல் ஸ்பெஷல் பாடலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வாத்தி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.படத்தில் வரும் கலங்குதே, ஒன் லைஃப், சூர்ய பறவைகளே ஆகிய மற்ற மூன்று பாடல்களும் கடந்த 4ம் தேதி சென்னையில் நடைபெற்ற வாத்தி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியானது.

தெலுங்கில் ‘சார்’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படம் பிப்ரவரி 17ம் தேதியான நேற்று வெளியானது. இந்நிலையில் தற்போது வாத்தி படம் பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதில் சில விமர்சனங்கள் இதோ!

Trending

Exit mobile version