சினிமா செய்திகள்

வாத்தி பட நடிகை சம்யுக்தாவின் துணிச்சல் முடிவு!

Published

on

நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ள சம்யுக்தா மேனன். இவரது பெயரில் உள்ள ஜாதி பெயரான மேனனை நீக்க உள்ளதாக ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.

#image_title

தனுஷின் வாத்தி திரைப்பட புரோமோஷனுக்காக சென்னை வந்துள்ள நடிகை சம்யுக்தா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எனது பெயர் சம்யுக்தா தான் ஆனால் மேனன் என்று ஜாதி பெயரை அடைமொழியாக போட்டுக்கொள்வதை நான் ஒருபோதும் விரும்புவதில்லை. மலையாள சினிமாவில் பல சம்யுக்தாக்கள் உள்ளதால் ஊடகங்கள் என்னை தனியாக குறிப்பிட மேனனை இணைத்து கொண்டார்கள். எனவே தயவு செய்து என்னை மேனன் என்று ஜாதியை அடையாளப்படுத்தாதீர்கள் என கூறினார். மேலும் எனது பெயருக்கு பின்னால் உள்ள மேனனை நீக்கவும் கூறிவிட்டதாக தெரிவித்தார்.

முன்னதாக வாத்தி திரைப்படம் குறித்து பேசிய சம்யுக்தா, இந்த படத்தில் பயாலஜி ஆசிரியையாக நடித்திருப்பதாகவும், கல்வித்துறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டும் படம் இது எனவும் கூறியுனார். மேலும் தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தது, அவை சரியாக அமையாததால் அவற்றை நிராகரித்தேன். தனுஷ் உடன் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இவைகள் நடந்ததாக தான் கருதுவதாக சம்யுக்தா கூறினார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version