சினிமா செய்திகள்

சூர்யா-வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் குறித்து அதிரடி அப்டேட்!

Published

on

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் ஆனால் அதன்பின் அந்த படம் குறித்த எந்த தகவலையும் படக்குழுவினர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படம் ட்ராப் செய்யப்பட்டதாக கூட வதந்தி கிளம்பியது.

ஆனால் ‘வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கண்டிப்பாக ‘வாடிவாசல்’ திரைப்படம் உருவாகும் என்றும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதனை உறுதி செய்வது போல் சற்று முன் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் ‘வாடிவாசல்’ படத்தின் பாடல்கள் கம்போசிங் பணியைத் தொடங்கிவிட்டதாக தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு சூர்யா ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு சூப்பர் ஹிட் பாடல்களாக எங்கள் தலைவர் சூர்யாவுக்கு கம்போஸ் செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெற்றிமாறன் தற்போது சூரி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அதேபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு சூர்யா மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் ‘வாடிவாசல்’ படத்திற்காக இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version