இந்தியா
தமிழ்நாடு தனிநபர் வருமானம், உபியை விட நான்கு மடங்கா? இந்தியாவை விட இரண்டு மடங்கா?
இந்திய அளவில் தனிநபர் ஆண்டு வருமானம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் அதில் உத்தரப் பிரதேசத்தை விட தமிழ்நாடு தனிநபர் வருமானம் சுமார் நான்கு மடங்கு அதிகமாகவும் இந்தியாவின் தனிநபர் சராசரி வருமானத்தை விட தமிழ்நாட்டின் சராசரி வருமானம் சுமார் இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் தனிநபர் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 2.4 லட்சம் ரூபாய் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் தனிநபர் வருமானம் 1.35 லட்சம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே நேரத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனி நபர் வருமானம் வெறும் 65,704 என்று கணக்கிடப்பட்டுள்ளது.
தனிநபர் வருமானத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது உத்தரபிரதேச விட தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்பதும், இந்தியாவில் உள்ள சராசரி தனிநபர் வருமானத்தை விட தமிழகத்தின் தனிநபர் வருமானம் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை வெறும் 7.5 கோடி தான் என்றும் ஆனால் உத்தர பிரதேஷ் 29 கோடி இருப்பதால் அதன் சராசரி குறைய வாய்ப்பு இருப்பதாகவும் இந்த இரு மாநிலங்களை ஒப்பிடுவதே தவறு என்றும் கூறப்பட்டு வருகிறது.
மேலும் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு பின்னடைவில் தான் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் தனி நபர் வருமான பட்டியலில் 6 முதல் 9வது இடத்தில் இருக்கும் நிலையில் தமிழ்நாடு 12வது இடத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.