இந்தியா

செயல்பாடுகள் சரியில்லை: முதல்முறையாக ராஜினாமா செய்த பாஜக முதல்வர்!

Published

on

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் செயல்பாடு சரியில்லை என கூறிய கட்சி தலைமை அவரை ராஜினாமா செய்ய வைத்திருப்பது முதல் முறையாக பாஜகவில் நடத்த உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் திரிவேந்திரசிங். கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக இவர் முதல்வர் பதவி ஏற்றார். இந்த நிலையில் இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்க உள்ளது.

இதனை அடுத்து முதல்வர் திரிவேந்திரசிங் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி அவர் கட்சி தலைமையால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து நேற்று இரவு அவர் ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

முதல் முறையாக ஒரு முதலமைச்சர் சரியாக செயல்படவில்லை என்று வந்த புகாரின் அடிப்படையில் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் திரிவேந்திரசிங் அவர்கள் ’கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு தான் ராஜினாமா செய்ததாகவும், தன்னுடைய ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்பது குறித்து டெல்லி தலைமையிடம் தான் நீங்கள் விளக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் இத்தனை ஆண்டுகள் தன்னை முதல்வராக பணி புரிய வைக்க அனுமதித்த கட்சித் தலைமைக்கு தனது நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஹரியானா அமைச்சர் சிங் ராவத் உத்தரகாண்டில் அடுத்த முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version