உலகம்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டவருக்கு ஏற்பட்ட Severe அலர்ஜி… வெளிவந்த பகீர் தகவல்!

Published

on

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா பெருந்தொற்று வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அது பொதுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பிரிட்டனில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தது. அதைப் போலவே அமெரிக்காவிலும் கடந்த திங்கட்கிழமை முதல் கொரோனா தடுப்பூசியைப் போட அந்நாட்டு அரசு அவசர கால அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, சுகாதாரத் துறையில் ஈடுபடிக்குரும் ஊழியர்களுக்கு முதலாவதாக கொரோனா தடுப்பூசி செலுத்த அமெரிக்க அரசு நடவடிக்கை எடுதுள்ளது. இதையொட்டி அலாஸ்கா மாகாணத்தின் ஜூனோ பார்லெட் ரீஜினல் மருத்துவமனையில் பணி செய்து வரும் நடுத்தர வயது மதிக்கத்தக்க மருத்துவ ஊழியருக்கு புதன் கிழமை, பிஃபைசர் இன்க். மற்றும் பயோஎன்டெக்கின் ( Pfizer Inc and BioNTech) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே அந்த மருத்துவ ஊழியருக்கு அலர்ஜி ஏற்பட்டதாம். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாம்.

இதனால், அவரை மருத்துவமனையிலேயே அனுமதித்துத் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் மருத்துவர்கள். பிஃபைசர் நிறுவனம் ஏற்கெனவே வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, ‘மருந்து மற்றும் மாத்திரைகளை உட்கொண்டால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படும் என்றால், எங்களது கொரோனா தடுப்பூசியை மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னர் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்திருந்தது. அதே நேரத்தில் தற்போது பாதிக்கப்பட்ட நபருக்கு மருந்து தொடர்பான அலர்ஜிகள் ஏதும் இதற்கு முன்னர் இருந்ததில்லை என்றும் தகவல் சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் இன்னும் சில பிரச்சனைகள் இருப்பது இந்த செய்தியின் மூலம் தெரிகிறது.

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version