உலகம்

நடுவானில் கொரோனா டெஸ்ட்: பாசிட்டிவ் ரிசல்ட் வந்த பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Published

on

நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததை அடுத்து அந்த பெண் எடுத்த முடிவு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த மரியா என்ற பெண் விமானத்தில் பயணம் செய்தார். விமான நிலையத்தில் அவருக்கு கொரனோ பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. இதனை அடுத்து அவர் அந்த விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென தொண்டைவலி மற்றும் இருமல் வந்தது. இதனை அடுத்து அவர் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் தன்னுடன் கொண்டு வந்திருந்த ராபிட் டெஸ்ட் கிட் மூலம் ரெஸ்ட்ரூம் சென்று பரிசோதனை செய்தார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு பாசிட்டிவ் என்று வந்தது.

இதனால் அவர் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே விமான பணிப்பெண்ணிடம் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்து விட்டதாகவும், தன்னை தனிமைப்படுத்தவும் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த விமானத்தில் தனிமைப்படுத்தும் கொள்ளும் அளவுக்கு வசதி இல்லை. இதனை அடுத்து அந்த பெண்மணி தான் ரெஸ்ட்ரூமிலேயே தனிமைப்படுத்தி கொள்வதாகவும் தனக்காக யாரும் சிரமப்பட வேண்டாம் என்றும் கூறிய அவர் அந்த விமான பயணம் முழுவதுமே ரெஸ்ட் ரூமில் தங்கி இருந்தார்.

விமானம் தரையிறங்கியதும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நடுவானில் கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டதும் அதனால் மற்றவர்களுக்கு சிரமம் வேண்டாம் என விமான பயணம் முழுவதிலுமே ரெஸ்ட் ரூமில் தங்குவதாக எடுத்து அந்த பெண்ணின் முடிவு அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது கொடுக்கும்.

seithichurul

Trending

Exit mobile version