உலகம்

அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை விரட்டியடித்த ரஷ்யா: அதிர்ச்சி தகவல்

Published

on

உக்ரைன் விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா விரட்டி அடித்ததாக வெளிவந்ததுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷ்யா இடையே கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் வடக்கு பசிபிக் கடலில் குறில் தீவு என்ற பகுதியின் அருகே அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் வந்து கொண்டிருந்ததை ரஷ்யாவின் போர்க்கப்பல் கண்டுபிடித்தது

இதனை அடுத்து அந்த இடத்தை விட்டுச் செல்லுமாறு தாங்கள் விடுத்த கோரிக்கையை அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏற்க மறுத்ததால் உடனடியாக தங்கள் நாட்டு வீரர்கள் அந்த நீர்மூழ்கி கப்பலை விரட்டி அடுத்ததாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

ரஷ்யாவின் எல்லையில் அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் ஒன்று வந்தது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க தூதரக அதிகாரிகள் உடனடியாக நேரில் வரவழைக்கப்பட்டு இதுகுறித்து விளக்கம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

ஆனால் அதே நேரத்தில் ரஷ்ய கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அத்துமீறி நுழைந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version