உலகம்

என்னை கேட்காதீர்கள்.. சீனாவை கேளுங்கள்.. பத்திரிக்கையாளர்களிடம் கோபமடைந்த டிரம்ப்!

Published

on

இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கோபமடைந்து இடையில் வெளியேறியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது அவருக்கு சரமாரியாகக் கேள்விகள் பரந்தன.

அதில் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர், பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது அமெரிக்கா சிறப்பாக கொரோனாவை எதிர்த்து வருகிறது என்று கூறுகிறீர்கள். அப்படியெனில் ஏன் அமெரிக்கர்கள் அதிகளவில் இறக்கிறார்கள்? இது என்ன சர்வதேச நாடுகளுக்கு இடையிலான போட்டியா?” என்று கேட்டார்.

உடனே கோவம் அடைந்த டொனால்ட் டிரம்ப், “என்னை கேட்காதீர்கள், சீனாவை கேளுங்கள்” என்று கூறிவிட்டு பத்திர்க்கையாளர்கள் சந்திப்பின் இடையிலேயே வேகமாக வெளியேறிவிட்டார்.

seithichurul

Trending

Exit mobile version