உலகம்

‘வெளியே போ..!’- அமெரிக்க அமைச்சர்களே அதிபர் டிரம்பை நீக்க சீக்ரெட் பிளான்

Published

on

அதிபர் பதவியிலிருந்து விலக மறுக்கும் டொனால்டு டிரம்பை, அமெரிக்க அமைச்சர்களே நீக்க ரசிகயமாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், தோல்வியடைந்த காரணத்தினால், அவரது ஆதரவாளர்கள் கொதிப்பில் இருக்கின்றனர். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அதற்கான ஆதாரங்கள் எதையும் அவர்கள் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று வாஷிங்டன் டி.சி-யில் உள்ள நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க காவல் துறையுடன் அவர்கள் மோதலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெறுப்புப் பிரச்சாரம் செய்து வந்த அதிபர் டிரம்பின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தற்போது டிரம்ப் என்ன நிலையில் இருக்கிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவர் மற்றும் அவரது குடும்பத்தினர், வன்முறையை ஏவிவிட்டதற்காக கைது செய்யப்படக்கூடும் என்று கூட சலசலக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பதவியிலிருந்து இறங்க மறுக்கும் டிரம்பை, சட்டப்பூர்வமாக நீக்குவது குறித்து அவரது அமைச்சர்களே ஆலோசித்து வருவதாக தகவல். அப்படி டிரம்பை நீக்குவதற்கு துணை அதிபர் மைக் பென்சின் ஒப்புதல் தேவைப்படும். அவரும் முடிவுக்கு ஓகே சொல்லியிருப்பதாக தெரிகிறது. இதனால் அமெரிக்க அரசியல் குழப்பம் சீக்கிரமே முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் தேதியோடு டிரம்பின் பதவிக்காலம் முடிவடைவது குறிப்பிடத்தக்கது. அன்று அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன், பதவியேற்பார்.

 

 

seithichurul

Trending

Exit mobile version