உலகம்

அமெரிக்காவைப் புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ்.. சீனாவை முந்தியது!

Published

on

கொரோனா வைரஸ் அமெரிக்காவைப் புரட்டிப்போட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை, சீனாவை முந்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 85,500 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளது எனஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் டிராக்கர் தரவுகள் கூறுகின்றன.

சீனாவில் இதுவரை 81,700 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்பதே உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக உள்ளது.

தற்போது உலகம் முழுவதும் 5,31,700 நபர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. அதில், 24,000 நபர்கள் இறந்துள்ளனர். கடந்த சில தினங்களாக, தினமும் 1000 கணக்கானவர்கள் கொரோனா வைரஸ் தக்குதல் காரணமாக இறந்துள்ளனர்.

ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி என்னவென்றால் 1,22,200 நபர்கல், கொரோனா வைரஸ் தாக்கிய பிறகு அளிக்கப்பட்டு சிகிச்சைகளில் குணமடைந்துள்ளனர்.

இப்படி குணமடைந்தவர்கள் இரத்தத்தில் கொரோனா வைரஸ்க்கு எதிரான அணுக்குள் உருவாகத் தொடங்கி இருக்கும். எனவே அவர்களின் இரத்தத்தை வைரஸ் உள்ளவர்களுக்குச் செலுத்தினால் இன்னும் வேகமாக கொரோனா வைரஸ் கிருமியைக் கொள்ளும் என்ற முயற்சியில் சீனா உள்ளது.

இந்தியாவில் இதுவரை 693 பேர் கோரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 16 பேர் இறந்துள்ளனர். 45 பேர் குணமடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version