உலகம்

அமெரிக்க தேர்தலில் கெத்து காட்டிய பெண்கள்.. புரட்சி செய்த கறுப்பினத்தவர்கள்!

Published

on

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இந்த முறை அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதேபோல் கறுப்பின மக்களும் அதிக அளவில் வென்று இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நேற்று மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.

அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இதில் பல புரட்சிகரமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிக பெண்கள் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். 435  பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடந்தது.

இதில் பிரதிநிதிகள் சபைக்கு இதுவரை மொத்தம் 90 பெண்கள் தேர்வாகியுள்ளனர். இதில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பாக 78 பெண்களும், டிரம்ப்பின் குடியரசுக் கட்சி 12 சார்பாக பெண்களும் தேர்வாகி உள்ளனர்.

அதேபோல் அதிக அளவிலான கருப்பின பெண்களும் இதில் வெற்றிபெற்று இருக்கிறார்கள். மாசுச்சுசெட்ஸ் தொகுதி முதல் கறுப்பின பெண்ணை தேர்வு செய்துள்ளது.

 

 

seithichurul

Trending

Exit mobile version