உலகம்

அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தலில் வென்ற 2 ஒருபாலினத்தவர்.. மாஸ் காட்டிய மக்கள்!

Published

on

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இரண்டு ஒருபாலின வேட்பாளர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.

இதில் நிறைய கருப்பின மக்கள் வெற்றியடைந்து இருக்கிறார்கள். அதேபோல் பூர்வ குடி அமெரிக்க ஆண்களும் நிறைய பேர் வென்றுள்ளனர். முதல் பூர்வ குடி அமெரிக்க பெண் ஒருவர் வென்றுள்ளார்.

ஜனநாயக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜாரேட் போலிஸ் இந்த தேர்தலில் கொலராடோ தொகுதியின் கவர்னராக தேர்வாகி உள்ளார். இவர் ஒருபாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கவர்னர் தேர்தலில் வென்ற முதல் ஒருபாலினத்தவர் இவர்தான்.

அதேபோல் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஷாரிஸ் டேவிட்ஸ் கன்சாஸ் தொகுதியில் பிரதிநிதிகளின் சபையில் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த தேர்தலில் வெற்றி அடையும் முதல் அமெரிக்க பூர்வ குடி பெண் இவர்தான். இவரும் ஒருபாலினத்தவர் என்பது குறிப்பிடதக்கது.

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version