உலகம்

அவசரநிலை பிரகடனம், 1500 விமானங்கள் ரத்து: அமெரிக்க அரசு உத்தரவு

Published

on

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதேபோல் 1500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் வெளி வந்திருக்கும் செய்தியை அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் சமீபத்தில் வரலாறு காணாத வகையில் பனிப்புயல் வீசி வருகிறது என்பதும் அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், நியூஜெர்சி ஆகிய பகுதிகளில் பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 1500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனியில் சிக்கிய வாகனங்களை அமெரிக்காவின் மீட்பு படைகள் மற்றும் ராணுவம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் பல இடங்களில் தரையிலிருந்து 2 அடி முதல் 4 அடி வரை பனி கொட்டி கிடைப்பதால் வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் மக்கள் வீட்டுக்குள்ளேயே குளிர் காரணம் முடங்கி இருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடும் பனிப்பொழிவு காரணமாக மின்சாரம் விநியோகம் தடை பெற்றுள்ளதாகவும் இதனால் அமெரிக்க மக்கள் சுமார் 7 கோடி பேர் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் அமெரிக்க அரசு பொது மக்களை அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாறு காணாத பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில்அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version