உலகம்

எச்-4 தடை சட்டத்திற்கு அனுமதியை மறுத்த நீதிமன்றம்? அமெரிக்க இந்திய தம்பதிகள் மகிழ்ச்சி!

Published

on

எச்-1பி விசா கீழ் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள், அவர்களைச் சார்ந்து உள்ளவர்களை பணியுடன் அழைத்துச் செல்ல உதவும் முறை எச்-4 வேலைவாய்ப்பு அங்கிகார ஆவணம் (H4 EAD) ஆகும்.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா இருக்கும் காலத்தில் இந்த எச்-4 முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த எச்-4 முறையின் கீழ் இந்தியர்கள் பெறும் அளவில் பயன்பெற்று வந்தனர்.

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்ததிலிருந்து அமெரிக்கா வரும் வெளிநாட்டவர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்து வந்த நிலையில் எச்-4 முறையைத் தடை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தது.

அதை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கணவன் ஒரு நாட்டிலும், மனைவி ஒரு நாட்டிலும் எப்படி வாழ்வது என்று முறையிடப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகளை அமெரிக்க அரசின் எச்-4 சிறப்பு அனுமதி முறை தடை சட்டத்தைச் செல்லாது என்று அறிவித்துள்ளது.

இதனால் அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள், அதிலும் குறிப்பாக இந்தியர்கள் பெறும் மகிழ்ச்சியை அடைந்துள்ளார்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version