உலகம்

டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை: ஒருவர் பலி – என்ன நடக்கிறது?

Published

on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், தோல்வியடைந்த காரணத்தினால், அவரது ஆதரவாளர்கள் கொதிப்பில் இருக்கின்றனர். தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல், முறைகேடு நடந்திருப்பதாக அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று வாஷிங்டன் டி.சி-யில் உள்ள நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்க காவல் துறையுடன் அவர்கள் மோதலிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மொத்தமாக 306 இடங்களைக் கைப்பற்றினார். டிரம்பால் வெறுமனே 232 இடங்களை மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனால் டிரம்பின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது. அதே நேரத்தில் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறார் டிரம்ப். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ‘நான்தான் வெற்றி பெற்றேன். நான் அதிபர் பதவியை விட்டுக் கொடுக்க மாட்டேன்’ என்று உறுதிபட தெரிவித்து வந்தார். தொடர்ந்து தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தாலும், அதற்கு எந்தவித ஆதாரங்களையும் அவர் வெளியிடவில்லை.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோ பைடனின், வெற்றிக்கு எதிராக டிரம்ப், பல இடங்களில் நீதிமன்றங்கள் மூலம் மேல்முறையீடுகளையும் செய்தார். ஆனால், அதிலும் அவருக்கு ஆதரவாக எந்தவித தீர்ப்புகளும் வரவில்லை. இதனால் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் டிரம்ப். வரும் ஜனவரி 20 ஆம் தேதியோடு டிரம்பின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதையொட்டி, அவரை அலுவலகத்திலிருந்து வெளியேற்றுவது குறித்து புதன் கிழமையான நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்தின் போதுதான் டிரம்ப் ஆதரவாளர்கள், உள்ளே புகுந்து தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர். இது வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜோ பைடன், ‘ஜனநாயகம் மிகவும் வலிமையற்றது என்பது இன்று மீண்டும் நமக்கு நிரூபணம் ஆகியுள்ளது. அதை பாதுகாக்க நல்லெண்ணம் படைத்தவர்கள் மற்றும் தைரியம் உள்ள தலைவர்கள் தேவை. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று துடிப்பவர்கள் நமக்கு முக்கியமல்ல. சொந்த ஆதாயத்திற்காக அரசியல் செய்பவர்கள் நமக்கு முக்கியமல்ல. பொது நலனிற்காக செயல்படுபவர்களே நமக்குத் தேவை’ என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பதிவிட்டு வந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டன. கடைசியா அவர், தன் ஆதரவாளர்களுக்கு, ‘யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டும். அமைதியாக இருங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 

Trending

Exit mobile version