உலகம்

20 ஆண்டுகளுக்கு பின் ஆப்கனைவிட்டு வெளியேறும் அமெரிக்க படைகள்: ஜோபைடன் முடிவு

Published

on

20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கன் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னர் தலிபான்களின் கொட்டத்தை அடக்குவதற்காக அமெரிக்க நாட்டில் புகுந்து அங்கு தலிபான்களின் அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க படை, தற்போது ஆப்கனில் இருந்து வெளியேற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் தலைநகரில் அமெரிக்கா மற்றும் தலிபான்களுக்கும் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது ஆப்கனை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் என்றும் அவ்வாறு வெளியேறும் படைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை தலிபான்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து சொன்னபடியே ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்ற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 20 ஆண்டுகால அமெரிக்கா – தலிபான்கள் இடையே இருந்த பகை தற்போது முடிவுக்கு வருகிறது என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Two indian origin Experts Appointed to Key Positionsஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக வெளியேறும் என்றும் அடுத்த தலைமுறை அமெரிக்கர்களை ஆபத்தில் சிக்க வைக்க விரும்பாததால் ஆப்கனுக்கு இனி படைகளை அனுப்ப போவதில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து ஆப்கன் படை விலகுவது வரலாற்று சிறப்புமிக்க முடிவாக கருதப்படுகிறது என்றும் இனி ஆப்கன் தனது நாட்டின் வளத்தைப் பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version