உலகம்

வெளியேறிய அமெரிக்க படைகள், உள்ளே வந்த அல்கொய்தா, ஐஎஸ் அமைப்புகள்: ஆப்கனின் எதிர்காலம்?

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு தற்போது அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.அமைப்புகள் உள்ளே வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இருந்ததால் அந்நாட்டில் உள்நாட்டு போர் மூண்டது. தாலிபான்களுக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் நடந்த போரில் 2461 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதும், ஆயிரக்கணக்கான தாலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்கனில் அமெரிக்க படைகள் இருந்தவரை தாலிபான்களால் முன்னேற முடியாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறின. இதனை அடுத்து தாலிபான்கள் காபூல் வரை முன்னேறி ஒட்டுமொத்த ஆப்கனையும் தற்போது கைப்பற்றி உள்ளனர் என்பதும் ஆப்கன் நாடு முழுவதும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றுக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற வேண்டுமென தாலிபான்கள் கெடு விதித்துள்ள நிலையில் அமெரிக்கப் படைகள் இன்று முழுமையாக வெளியேறின. அமெரிக்க படையின் கடைசி வீரர் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு பக்கம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் அல்கொய்தா மற்றும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து விட்டதாக பின்லேடனின் பாதுகாவலர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள இரட்டை கோபுரத்தை தகர்க்க முக்கிய காரணமாக இருந்த ஒசாமா பின்லேடனின் பாதுகாப்பு படையின் பாதுகாவலராக இருந்த அமீன் உல் ஹக் என்பவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆப்கன் நாட்டிற்கு திரும்பி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

தோரா போரா மலையில் பின்லேடன் இருந்தபோது அவருடன் இருந்த அமின், அமெரிக்க படைகள் தாக்குதலுக்கு பயந்து ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிச்சென்றார். தற்போது அமெரிக்க படைகள் முழுமையாக விலகி உள்ளதை அடுத்து அவர் நாடு திரும்பியுள்ளார். அதேபோல் தீவிரவாதிகள் அனைவரும் ஆப்கனுக்குள் நுழைந்து உள்ளதால் அந்நாட்டின் எதிர்காலம் பெரும் கேள்விக் குறியாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version