தமிழ்நாடு

ஞாயிறு ஊரடங்கின்போது புறநகர் ரயில் இயங்குமா? ரயில்வே துறை அறிவிப்பு!

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழுவதும் முழு நேர ஊரடங்கு மற்றும் கடைகள் திறப்பதற்கு கட்டுப்பாடு, வழிபாட்டு வழிபாட்டு தலங்கள் வார இறுதியில் மூடல் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊரடங்கின் பொது போக்குவரத்து நடைபெறும் என்றும் முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவை பணி வருபவர்களின் வசதிக்காக புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. வழக்கம்போல் அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சார ரயில்கள் இயங்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் மின்சார ரயில் சேவை 50 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

எனவே ஞாயிறு முழு ஊரடங்கின்போது காவல்துறையினர், மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட அத்தியாவசியமான பணிக்கு செல்பவர்கள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிபிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version