வணிகம்

மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது யுபிஐ.. கூகுள் பே, பேடிஎம் பயனர்கள் மகிழ்ச்சி!

Published

on

கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செய்ய மிகவும் பயன்படும் யுபிஐ செயலிகள் கடந்த 2 மணி நேரமாக செயல்படவில்லை.

“தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த யுபிஐ பரிவர்த்தனை சேவை சில மணி நேரம் செயல்படவில்லை. சிரமத்துக்கு வருந்துகிறோம். தற்போது கோளாறு சரி செய்யப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என தேசிய கொடுப்பனவு கழகம் தெரிவித்துள்ளது.

யுபுஐ சேவையைப் பயன்படுத்தி பணம் பரிவர்த்தனை சேவையை வழங்கி வரும் கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் வேலை செய்யாததை அடுத்து இது டிவிட்டரில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version