வணிகம்

ஜிபே, போன்பே மூலம் எவ்வளவு பணம் அனுப்ப முடியும்? எத்தனை பரிவர்த்தனை செய்ய முடியும்?

Published

on

2016-ம் ஆண் ஆண்டு யுபிஐ செயலிகள் மூலமாக எளிமையாகப் பணம் பரிமாற்றம் சேவையை என்பிசிஐ உடன் இணைந்து ஆர்பிஐ தொடங்கி வைத்தது. இதனால் இன்று பலரும் ஜிபே, போன்பே, பேடிஎம் மூலமாக எளிமையாகப் பணம் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

ஆனாலும் பலருக்கு இந்த யுபிஐ செயலிகள் மூலம் தினமும் எவ்வளவு பணம் அனுப்ப முடியும்? எத்தனை பரிவர்த்தனை செய்ய முடியும்? என்ற விவரங்கள் தெரிவதில்லை. எனவே அதுபற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

யுபிஐ செயலிகள் மூலம் தினமும் எவ்வளவு பணம் அனுப்ப முடியும்?

என்பிசிஐ வழிகாட்டுதல்கள் படி அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் வரை யுபிஐ செயலிகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்ய முடியும். ஆனால் இந்த அதிகபட்ச வரம்பு வங்கி நிறுவனங்களைப் பொருத்து மாறும். உதாரணத்திற்கு கனரா வங்கியில் தினமும் 25 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே யுபிஐ செயலிகள் மூலம் பணம் பரிமாற்ற செய்ய முடியும். ஆனால் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 1 லட்சம் ரூபாய் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம்.

யுபிஐ செயலிகள் மூலம் தினமும் பரிவர்த்தனை செய்ய முடியும்?

யுபிஐ செயலிகள் மூலம் தினமும் அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகள் வரையில் மட்டுமே செய்ய முடியும். இந்த வரம்பு முடிந்துவிட்டால் அடுத்த 24 மணிநேரத்திற்கு யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்ய முடியாது.

ஜிபே

கூகுள் பே அல்லது ஜிபே மூலமாகத் தினமும் 1 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பலாம். ஆனால் 10 பரிவத்தனைகள் மட்டுமே செய்ய முடியும். 2000 ரூபாய் வரை பணம் பெறுவதற்கான கோரிக்கை வைக்க முடியும்.

போன்பே

கூகுள் பே போல பேன்பேவிலும் தினமும் 1 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பலாம். வங்கிகளைப் பெருத்து 10 முதல் 20 பரிவர்த்தனைகள் செய்ய அனுமதிக்கும். 2000 ரூபாய் வரை பணம் பெறுவதற்கான கோரிக்கை வைக்க முடியும்.

பேடிஎம்

பேடிஎம்-ல் தினமும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம். ஒரு மணி நேரத்திற்கு 20 ஆயிரம் வரை செய்யலாம். ஒரு மணிநேரத்திற்கு 5 பரிவர்த்தனை மட்டுமே செய்ய முடியும். அதிகபட்சம் 20 பரிவர்த்தனைகள் செய்யலாம்.

அமேசான் பே

அமேசான் பே மூலமாகத் தினமும் 1 லட்சம் ரூபாய் வரை பணம் பரிமாற்றம் செய்ய முடியும். முதல் 24 மணிநேரத்தில் 5 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும். தினமும் 20 பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.

seithichurul

Trending

Exit mobile version