இந்தியா

பசுக்களின் சடலம்.. உ.பி கலவரம் முன்பே திட்டமிட்டு நடந்ததா?

Published

on

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் நேற்று நடத்தப்பட்ட மனித தன்மையற்ற கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த கிராமத்தின் தாசில்தார் தெரிவித்து இருக்கிறார்.

உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பசுக்காவலர்கள் நேற்று நடத்திய கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொடூர கொலை குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த கலவரமே இந்துத்துவா அமைப்புகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. புல்சந்தார் தாசில்தார் ராஜ்குமார் பாஸ்கார் இதுகுறித்து திடுக்கிடும் விவரங்களை அளித்துள்ளார்.

பசுக்கள் கொல்லப்பட்டதுதான் இந்த கலவரத்திற்கு காரணம். ஆனால் இந்த பசுக்களை கொன்று, அதன் தோலை கரும்பு தோட்டத்தில் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று போட்டு இருக்கிறார்கள். மாட்டுக்கறியை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். வேண்டும் என்றே மக்களுக்கு இது தெரிய வேண்டும் என்று வெளியே தொங்கவிட்டு சென்று இருக்கிறார்கள்.

Trending

Exit mobile version