இந்தியா

உ.பி இன்ஸ்பெக்டரை பசு காவலர்கள் திட்டமிட்டு கொன்றனரா?

Published

on

லக்னோ: உத்தர பிரதேச கலவரத்தில் பசுக்காவலர்களால் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

நேற்று உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற கிராமத்தில் பசு இறைச்சி காரணமாக பெரிய கலவரம் நடந்தது. பசுக்காவலர்கள் நடத்திய கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அவர் மோசமாக தாக்கப்பட்டு, கல்லால் அடிக்கப்பட்டு பின் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 23 பசுக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கலவரத்தில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் மீரட்டை சேர்ந்தவர். இவர்தான் 2015ல் பசு பெயரால் நடந்த கொலையை விசாரித்து வந்தார். 2015ல் உ.பி பிசாந்தா கிராமத்தில் முகமது அஃலா என்ற நபர் பசு கறி சாப்பிட்டதாக பசுக்காவலர்களால் கொலை செய்யப்பட்டார். இதுதான் உ.பியை உலுக்கிய மிகப்பெரிய பசுக்கொலை ஆகும். இதைத்தான் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் விசாரித்து வந்தார்.

Trending

Exit mobile version