இந்தியா

காய்கறி விற்பனையாளர் வங்கி கணக்கில் ரூ.172 கோடி.. இப்படியும் மோசடி செய்யலாமா? உஷாராக இருங்க..!

Published

on

சிறிய அளவில் காய்கறி வியாபாரம் செய்து வரும் ஒருவரது வங்கி கணக்கில் 172 கோடி இருந்ததாக வருமானவரித்துறை கண்டுபிடித்தது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் ராஸ்தோகி என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் என்பதும் இவர் தினசரி ஒரு சில நூறு ரூபாய்களுக்கு மட்டுமே லாபம் சம்பாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காய்கறி வியாபாரி விஜய் ராஸ்தோகி வங்கி கணக்கில் 172 கோடி இருப்பு வைத்திருப்பதாக உத்திரபிரதேச மாநில போலீசார் விசாரணை நடத்திய போது விசாரணையில் கிடைத்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் ராஸ்கோகியின் வங்கி கணக்கில் 172 கோடி இருப்பதாக தகவல் வெளியானதும் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் உத்தரபிரதேச மாநில போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது எனக்கு வங்கி கணக்கு இல்லை என்றும் அந்த வங்கி கணக்கு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்று எனக்கு தெரியாது என்றும் அவர் கூறியது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியது.

தனது ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு ஆகியவற்றை கொண்டு யாரோ முறைகேடான முறையில் தனது பெயரில் வங்கி கணக்கை தொடங்கி பரிவர்த்தனை செய்து வருவதாகவும் அவர் கூறியது வருமானவரி துறை எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் ராஸ்தோகி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தொடர்ந்து வருமான வரி துறையினர் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருவதால் அவரது குடும்பத்தினர் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் அந்த வங்கி கணக்கு தனக்கு சொந்தமானது அல்ல என்று ரஸ்தோகி கூறியதையும் வருமானவரித்துறை ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியபோது ரஸ்தோகியின் பெயரில் உள்ள வங்கி கணக்கில் 172 கோடி வரவு வைக்கப்பட்டதை அறிந்ததும் விசாரணையை தொடங்கினோம் என்றும் இது குறித்து அவரிடம் விசாரணை செய்த போது அந்த வங்கி கணக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறினார். அதன் பிறகு தான் அவருடைய பான் கார்டு மற்றும் பிற ஆவணங்களை தவறாக பயன்படுத்தி மர்ம நபர்கள் யாரோ சில வங்கி கணக்கு தொடங்கி ஆன்லைன் மூலம் வங்கி கணக்கை தொடங்கி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்து வருவது குறித்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த நிலையில் இது குறித்து பொது மக்களுக்கு தெரிய வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்னவென்று ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்டவற்றை தேவையில்லாத இடத்தில் கொடுக்க வேண்டாம் என்றும் அவ்வாறு கொடுத்தால் அதன் மூலம் மர்ம நபர்கள் சிலர் ஆன்லைன் மூலம் உங்கள் பெயரிலேயே வங்கி கணக்கு தொடங்கி பரிவர்த்தனை செய்ய தொடங்குவார்கள் என்றும் எனவே மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version