இந்தியா

“பெண் குழந்தை பெற்றவர்களுக்கு ரூ.70 லட்சம் வரையில் ரிட்டன் பெறமுடியுமா? – சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்”!

Published

on

சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) அல்லது செல்வமகள் சேமிப்புத் திட்டம், பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறுசேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தில், ஒருவர் குறைந்தபட்சமாக 250 ரூபாயை முதலீடு செய்யலாம், அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாயையும் ஒரு நிதியாண்டில் முதலீடு செய்யலாம்.

10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாதுகாவலர்கள் இந்த அக்கவுண்டை திறக்கலாம். ஒரே வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுக்கே இந்த அக்கவுண்ட் திறப்பதற்கான அனுமதி உள்ளது.

வட்டி விகிதம்:

2024 ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் 8.2% ஆக உள்ளது, இது கடந்த காலாண்டில் இருந்து மாற்றமின்றி உள்ளது.

மெச்சூரிட்டி:

சாதாரணமாக, இந்த திட்டம் 15 ஆண்டுகளில் மெச்சூரிட்டி அடையும். ஆனால், பெண் குழந்தை 18 வயதில் திருமணம் செய்துகொண்டாலோ அல்லது 21 வயதை அடைந்தாலோ திட்டம் மெச்சூரிட்டியாகும்.

வரிச்சலுகைகள்:

இந்த திட்டத்தில் நீங்கள் 1.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால், வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-இன் கீழ் வரிச்சலுகையைப் பெறலாம்.

மெச்சூரிட்டி ரிட்டன்ஸ்:

  • மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்தால், 15 வருடங்களில் மெச்சூரிட்டி தொகையாக 27.92 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
  • மாதம் 8,333.33 ரூபாய் முதலீடு செய்தால், 46.53 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
  • மாதம் 12,333.33 ரூபாய் முதலீடு செய்தால், 69.80 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
  • பெண் குழந்தைகளுக்காக பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய, இந்தச் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் மிகச் சிறந்ததாகும்.
Poovizhi

Trending

Exit mobile version