இந்தியா

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

முக கவசம் அணியாவிட்டால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில முதல்வர் ஒருவர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று உத்தரப்பிரதேசம். இம்மாநிலத்தில் நேற்று மட்டும் 22 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் வீட்டை விட்டு வெளியே வரும்போது மாஸ்க் அணியாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏற்கனவே உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் இந்த எச்சரிக்கையை மீறி பலர் முக கவசம் அணியாமல் வெளியே வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர் முதல் முறை என்றால் ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டாவது முறை என்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே கொரோனாவால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வருமானம் இன்றி இருக்கும் போது மக்கள் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்பது மிக அதிகம் என்று கருத்து கூறி வருகின்றனர். இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version