இந்தியா

தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன்கோவில்: பாஜக எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு!

Published

on

கடந்த பல ஆண்டுகளாக நடந்துவந்த அயோத்தி ராமர் கோவில் பிரச்சினை தற்போதுதான் முடிவுக்கு வந்துள்ளது என்பதும் இதனை அடுத்து அயோத்தி ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி தனித்தனியாக கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திடீரென தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது என பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக ஒரு சில பாஜக நிர்வாகிகள் கூறிய நிலையில் உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் என்பவர் தாஜ்மஹால் இருந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது என்றும் தாஜ்மஹால் விரைவில் ராஜ்மஹால் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. நாட்டில் பெட்ரோல் விலை உள்பட பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த நிலையில் தற்போது தாஜ்மஹால் பெயரை மாற்றுவது தான் முக்கியமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version