இந்தியா

ஆக்சிஜன் பற்றாக்குறை என செய்திகள் பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல்: யோகி ஆதித்யநாத்

Published

on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என பொய்யான செய்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக சமூக வலைதளங்கள் மற்றும் சில இணையதளங்களில் செய்திகள் வெளியானது.

இதற்கு பதிலளித்துள்ள உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை என்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை என செய்தி பரப்பினால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதுமட்டுமின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version