இந்தியா

உ.பி முதல்வர் ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதியானது

Published

on

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன் பணி செய்து வந்த அரசு உயர் அதிகாரிகளுக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது சோதனைகள் மூலம் உறுதியானது. இதையடுத்து, யோகி ஆதித்யநாத், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது என்னும் தகவலை ட்விட்டர் தளம் மூலம் அறிவித்துள்ளார் ஆதித்யநாத்.

‘கொரோனா இருப்பதற்கான அறிகுறிகள் என் உடம்பில் தென்பட்ட உடனேயே, கொரோனா பரிசோதனையை எடுத்துக் கொண்டேன். தற்போது அதற்கான முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. நான் இப்போது தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவர்கள் அறிவுரைகள்படி கேட்டு நடந்து வருகிறேன். எனது பணிகளை நான் தனிமையில் இருந்தபடியே செய்து வருகிறேன்’ என ட்விட்டரில் கூறியுள்ளார் ஆதித்யநாத்.

இந்த மாதத் தொடக்கத்தில் முதல்வர் ஆதித்யநாத், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். உத்தரப் பிரதேச முதல்வராக தனது பணிகளை ஆதித்யநாத் செய்து வந்த போதிலும், மேற்கு வங்கத்திலும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version