உலகம்

பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதி கூட்டணி உறுதியானது.. உ.பியில் 38-37 டீல் முடிந்தது

Published

on

லக்னோ: உத்தர பிரதேசத்தில் லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்க உள்ளது. இதற்காக இப்போதே கட்சிகள் தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் உத்தர பிரதேசம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளது. இங்கு அதிக இடங்களில் வெற்றி பெறும் கட்சி மத்தியில் எளிதாக ஆட்சி அமைக்க முடியும். இந்த 80 தொகுதிகளை கைப்பற்றவே அனைத்து கட்சிகளும் துடித்துக் கொண்டு இருக்கிறது.

கூட்டணி இறுதி உடன்படிக்கையின்படி உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களில் போட்டியிட உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களில் போட்டியிட இருக்கிறது. மொத்தமுள்ள 80 இடங்களில், 72 இடங்களில் மொத்தம் இந்த இரண்டு கட்சிகளும் போட்டியிட இருக்கிறது. எந்த கட்சி எங்கு போட்டியிடும் என்று தொகுதிகள் தற்போது ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

Trending

Exit mobile version