இந்தியா

முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பது எப்போது? ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இணைக்கப்படும் தேதி குறித்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து மாநிலங்களிலும் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் இணைக்க படாமல் இருந்தது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை மீண்டும் இணைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இணைக்க தேதி குறித்த அறிவிப்பை விரைவில் ரயில்வே நிர்வாகம் அறிவிக்கும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி மார்ச் 10ஆம் தேதி முதல் படிப்படியாக முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளை இணைக்க உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. படிப்படியாக மொத்தம் 192 ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version