தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: போட்டியின்றி வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விபரங்கள்!

Published

on

பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் எண்ணபட்டது என்பதும் முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில் அதுகுறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்.

சேலம் மாவட்டம் மேச்சேரி பேரூராட்சியில் 2, தெடாவூர் பேரூராட்சியில் 1, கொளத்தூர் பேரூராட்சியில் 1 என 4 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு.

திருநெல்வேலி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் 8 திமுக வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளரும் ஒருவரும் போட்டியின்றி தேர்வு.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டு திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு.

ராமநாதபுரம் நகராட்சி 7வது வார்டில் பிரவீன் தங்கம் 29வது வார்டு காயத்ரி ஆகிய இரண்டு திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு. மேச்சேரி ஊராட்சியில் இரண்டு திமுக பேர்களும் தெடாவூர், கொளத்தூர் பேரூராட்சியில் தலா 1 என 4 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டில் திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன் போட்டியின்றி தேர்வு.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி 6வது வார்டில் சர்மிலா பானு, இலுப்பூர் பேரூராட்சி 5வது வார்டில் தமிழ் ராஜா ஆகிய 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு .

உடுமலை நகராட்சி 14வது வார்டில் திமுக வேட்பாளர் மும்தாஜ் போட்டியின்றி தேர்வு.

பொள்ளாச்சி பெரிய நெகமம் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு;

8 பேர் திமுக வேட்பாளர்கள் என்பதால், பெரும்பான்மை பலத்துடன் பெரிய நெகமம் பேரூராட்சியை கைப்பற்றுகிறது திமுக.

 

seithichurul

Trending

Exit mobile version