இந்தியா

கல்லூரி தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட யுஜிசி!

Published

on

கொரோனா ஊரடங்கால் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்த முக்கிய முடிவை யுஜிசி எடுத்துள்ளது.

யுஜிசி எடுத்துள்ள முடிவில் செய்முறைத் தேர்வுகள், வாய்மொழித் தேவுகள் (viva – voice) போன்றவற்றை ஸ்கைப் போன்ற செயலிகள் மூலமாக நடத்தலாம்.

முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண்களைக் கொண்டு கிரேடு வழங்கலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

மேலும் இறுதி ஆண்டு செமஸ்தர் தேர்வுகளை ஜூலை மாதம் நடத்தலாம் என்றும் யுஜிசி கூறியுள்ளது.

எனவே விரைவில் அனைத்து பலகலைக்கழகங்களும் செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்த ஆண்டுக்கான் செமஸ்டரும், புதியதாக கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் கல்லூரியை தொடங்களாம் என்று யூஜிசி பரிந்துறைத்துள்ளது.

Trending

Exit mobile version