Connect with us

உலகம்

மியான்மரில் முடக்கப்பட்ட இணையம்.. உலக நாடுகளை ஒன்றிணைக்கும் ஐநா.. சிக்கலில் ராணுவம்

Published

on

Indian origin Arora Akanksha announced to her candidacy to be its next UN Secretary-General

மியான்மரில் ஆட்சிக்கவிழ்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட தொடங்கியுள்ள நிலையில் அந்நாட்டில் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு நிலைமை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உலக நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைக்க தயார் என்று ஐநா கூறியுள்ளது.

மியான்மரில் கடந்த திங்கட்கிழமை ராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்டது. கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சாங் சூகியின் என்.எல்.டி கட்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக ராணுவம் தரப்பில் சாட்டப்பட்டது. தான் கடந்த திங்கட்கிழமை திடீரென மியான்மர் ராணுவம் அங்கு ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டது.

ஆங் சாங் சூகி மற்றும் ஜனாதிபதி ஆகியோரை வீட்டுக்காவலில் வாய்த்த ராணுவம் அடுத்த ஒரு ஆண்டுக்கு அவசர நிலையை பிரகடனப்படுத்துவதாக அறிவித்தது. இதனால் மியான்மர் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் என்.எல்.டி கட்சி சார்பில் நியமிக்கப்பட்ட அமைச்சர்களை நீக்கிவிட்டு புதியதாக அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் வலியுறுத்தி வருகின்றனர்.

YANGON, MYANMAR – FEBRUARY 02: An armed soldier stands guard in front of a Hindu temple in the downtown area in Yangon, Myanmar on February 02, 2021. Myanmar’s military announced Monday that it has seized power and will rule the country for at least one year after detaining its top political leaders. (Photo by Stringer/Anadolu Agency via Getty Images)

இதற்கிடையே அங்கு மக்கள் வெடித்துள்ளது. ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் யாங்கோனின் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். ராணுவ சர்வாதிகார ஆட்சி ஒழிக, ஜனநாயக ஆட்சி வெல்க என கோஷங்களுடன் பல்வேறு ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். போராட்டம் தொடங்கியதில் இருந்து வலைத்தளங்கள் மூலம் மக்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். இதனால் பல இடங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது. மேலும் சில பகுதிகளில் வழக்கத்தை விட 54% இணைய வேகம் குறைந்துள்ளதாக கூறியுள்ளனர். கொரோனா தொற்று சமயத்தில், ஆட்சிக்கவிழ்பு திட்டத்தை நடத்தி, இணையதளத்தை முடக்குவது என்பது கொடூரமான மற்றும் பொறுப்பற்ற செயல் என அம்னஸ்டி இன்டர்நேஷனலின் பிரச்சாரங்களுக்கான துணை பிராந்திய இயக்குனர் மிங் யூ ஹா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஐக்கிய நாடுகள் சபை மியான்மரில் இராணுவத்துடன் முதல் தொடர்பைக் கொண்டுள்ளது என்று பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் தெரிவித்தார், பொதுமக்கள் மற்றும் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். எங்கள் சிறப்பு தூதர் இன்று ராணுவத்துடன் தொடர்பு கொண்டிருந்தார், அதில் அவர் துணை இராணுவத் தளபதியிடம் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தினார். இந்த சதி தலைகீழாக மாற்றுவதற்கான நிலைமைகள் உருவாக்கப்படுவதை உறுதி செய்வதில் சர்வதேச சமூகத்தை ஒன்றிணைக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இது நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குடெரெஸ் தெரிவித்துள்ளார்.

வணிகம்2 மணி நேரங்கள் ago

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

வருமான வரி தாக்கலில் இருந்து இவர்களுக்கு மட்டும் விலக்கு! எப்படி?

தினபலன்5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 19, 2024)

இந்தியா13 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்13 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா14 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்14 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை3 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

பல்சுவை6 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!