இந்தியா

மேடையிலேயே மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

Published

on

மத்திய கப்பல் மற்றும் நீர் ஆதார, தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருக்கிறார் பாஜகவை சேர்ந்த நிதின் கட்கரி. அடுத்த பாஜக பிரதமர் வேட்பாளர் கூட இவர் தான் என சில தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் இவர் இன்று மேடையில் மயங்கி விழுந்தது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் விவசாய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்றார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி. அப்போது பட்டமளிப்பு விழா மேடையில் தேசிய கீதத்திற்கு எழுந்து நின்ற அமைச்சர் நிதின் கட்கரி மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதனை எதிர்பார்க்காத அவருடன் மேடையில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் அவரை தாங்கி பிடித்தனர்.

இதனையடுத்து அமைச்சருக்கு உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசெல்லப்பட்டார். இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்பொழுது நலமுடன் இருப்பதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version