இந்தியா

இனி கர்ப்பிணிப் பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் – அரசு அறிவிப்பு!

Published

on

இந்தியாவில் இனி கர்ப்பிணிப் பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கோவின் செயலி மூலமோ, அல்லது கொரோனா தடுப்பூசி மையத்தை நேரடியாக அணுகியோ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு கூறியுள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றி அரசு சார்பில் இதுநாள் வரை எந்த வித விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது.

இதனால், குழந்தைகளைப் பெற்றெடுக்கப் போகும் தாய்மார்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்து வந்தது. இப்படியான சூழலில் தான் அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

முன்னதாக கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டால் எந்த மாதிரியான தாக்கங்கள் வரும் என்பது குறித்து தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லாத காரணத்தினால் அது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று அரசு கூறியிருந்தது. தற்போது எப்படியான தாக்கங்கள் ஏற்படும் என்பது தெரியவே புதிய முடிவு எடுத்து, அதை நடைமுறைப்படுத்த அரசு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version