இந்தியா

இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள்.. எப்படிக் கண்டறிவது?

Published

on

இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததை அடுத்து, அதை எப்படிக் கண்டறிவது என்று ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரையில் சுமார் 68 கோடி கொரோனா தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் இப்போது கோவிஷீல்டு, கோவாக்ஸின், ஸ்புட்னிக் வி உள்ளிட்ட கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டுள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் போலி கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதைத் தொடர்ந்து விசாரணையைத் தொடங்கியுள்ள ஒன்றிய அரசு, போலி கொரோனா தடுப்பூசிகளைக் கண்டறிவது குறித்து மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்கள் செய்யும் குப்பிகள், அதில் ஒட்டப்படும் லெபிள், சீல் உள்ளிட்டவற்றை எப்படிச் சரிபார்த்துப் பயன்படுத்த அனுமதிப்பது, சோதனைகளைச் செய்வது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version