வணிகம்

பருப்பு விலை உயர்வு.. இருப்பு வைத்துக் கொள்ள மத்திய அரசு கட்டுப்பாடு!

Published

on

மார்ச் மாதம் முதல் பருப்பு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஒன்றிய அரசு இந்த சந்தை கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

பருப்புகளைப் பதுக்கி, தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை ஏற்றுவதைக் கட்டுப்படுத்த, மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு ஒன்றிய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

மொத்த விலை பருப்பு வியாபாரிகள் 200 டன் வரை பருப்புகளை இருப்பு வைத்துக்கொள்ளலாம். சில்லறை வியாபாரிகள் அதிகபட்சம் 5 டன் வரை பருப்புகளை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

பருப்பு மில்களில் ஒரு ஆண்டு உற்பத்தியில் 25 சதவீதம் அல்லது மூன்று மாத தேவையில் எது அதிகமோ அது வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.

இறக்குமதியாளர்கள் 200 டன் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். இந்த புதிய கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்றும் ஒன்றிய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

பருப்பு விலை உயர்வுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வும் ஒரு முக்கிய காரணம் என வியாபாரிகள் கூறுகின்றார்கள்.

இந்த கட்டுப்பாடுகள் அக்டோபர் மாதம் வரை தொடரும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version