இந்தியா

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டால் விலை உயரும் பொருட்கள் என்னென்ன? குறையும் பொருட்கள் என்னென்ன?

Published

on

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

குறிப்பாக ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட தேவை இல்லை என்ற அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினரை மிகவும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு சுங்கவரி உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே தங்கம் மற்றும் வெள்ளி விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு காரணமாக இன்னும் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் மொபைல் போன்கள் மற்றும் டிவி ஆகியவற்றுக்கான உதிரி பாகங்களுக்கு வரி குறைக்கப்பட்டதால் மொபைல் போன்கள், டிவி விலைகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய பட்ஜெட் காரணமாக என்னென்ன பொருட்கள் விலை உயரும்? என்னென்ன பொருட்கள் விலை குறையும் ? என்பது குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.

பட்ஜெட்டால் விலை உயரும் பொருட்கள்:

  • தங்கம், வெள்ளி நகைகள்
  • கவரிங் நகைகள்
  • சிகரெட்
  • இறக்குமதி செய்யப்பட்ட கார்
  • இறக்குமதி செய்யப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள்
  • மின்சார சமையலறை புகைபோக்கி
  • இறக்குமதி செய்யப்பட்ட சைக்கிள்
  • பொம்மைகள்
  • இறக்குமதி செய்யப்படும் ரப்பர்கள்
  • சமையல்கூடங்களில் பயன்படுத்தப்படும் சிம்னி

பட்ஜெட்டால் விலை குறையும் பொருட்கள்:

  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல் போன்கள்
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தொலைக்காட்சிகள்
  • லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள்
  • தாமிர கழிவுப் பொருட்கள்
  • செயற்கை வைரங்கள்
  • இறால் உணவுகள்

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version