சினிமா செய்திகள்
கல்லா கட்டாத மோடி பயோபிக்; காரணம் என்ன தெரியுமா?
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் பயோபிக் படத்தை உருவாக்கினார்கள். இந்த படத்தில் மோடியாக விவேக் ஓபராய் நடித்திருந்தார்.
தேர்தலுக்கு முன்னதாக படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பெரும் முயற்சியை மேற்கொண்டது. ஆனால், எதிர்கட்சிகாரர்கள் தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து போராடி, இந்த படத்தின் வெளியீட்டு தேதியை தேர்தலுக்கு பின் தள்ளி வைத்தனர்.
தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானவுடன் பிஎம் நரேந்திர மோடி படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.
வார இறுதியில் படத்திற்கு பெரும்பாலும் மக்கள் வரவேற்பு அளிக்காத நிலை மற்றும் இந்த படத்திற்கு விமர்சகர்கள் கடும் விமர்சனத்தை வைத்தது என படத்திற்கு கூட்டமே வரவில்லையாம்.
இந்நிலையில், நாடு முழுவதும் இந்த படம் வெறும் 11 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் பட்ஜெட்டை கூட இந்த படம் வசூலிக்காதது குறிப்பிடத்தக்கது.