தமிழ்நாடு

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு!

Published

on

கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவில் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு நிலவரங்களை சிஎம்ஐஇ என்ற அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்நிறுவனம் தற்போது வேலையின்மை குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த  மாதங்களில் இல்லாத அளவில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 9.01 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்புறத்தில் மட்டும் 8.84 சதவீதமாகவும், கிராமபுறங்களில் 9.15 சதவீதமாகவும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதுகுறிப்பாக டிசம்பர் மாதத்தில் மட்டும் 1.13 கோடி பேருக்கு வேலையில்லாமல் திணறி வருவதாக கூறப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கல்வித்தரம் சிறப்பாக இருந்தாலும், வேலையின்மை என்பது இருந்துகொண்டே தான் இருக்கிறது. குரூப் 1 தேர்வுக்கு, ஒரு பதவிக்கு இரண்டாயிரம் பேர் போட்டி போடுகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளில் லட்சக்கணக்கானோர் தொடர்ந்து தேர்வு எழுதியும், போட்டியிட்டும் சோர்ந்து போய் உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version