தமிழ்நாடு

பெண் டிக்கெட் பரிசோதகரின் அசாத்திய சாதனை: 1 கோடி ரூபாய் அபராதம் வசூலிப்பு!

Published

on

பயணச் சீட்டு இன்றி இரயிலில் பயணம் செய்பவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க சென்னை எழும்பூர், சென்னை சென்டிரல், தாம்பரம் மற்றும் கிண்டி உள்ளிட்ட இரயில் நிலையங்களில் அடிக்கடி டிக்கெட் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முறையற்ற தவறானப் பயணத்தை தடுக்க, 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரை ‘ஒரு கோடி கிளப்’ எனும் ஒரு புதிய நடைமுறையை தெற்கு இரயில்வே ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கோடி கிளப்

2022 – 2023 ஆம் நிதியாண்டில் ரூ.1 கோடிக்கும் மேலாக அபராதம் வசூலிக்கும் டிக்கெட் பரிசோதகர்கள் 1 கோடி கிளப்பில் சேர்க்கப்படுவார்கள். அவ்வகையில், ரூ.1 கோடிக்கும் மேல் அபராதம் வசூலிக்கும் மைல் கல்லை, சென்னை கோட்டத்தை சேர்ந்த மூன்று டிக்கெட் பரிசோதகர்கள் எட்டி உள்ளனர். சென்னை கோட்டத்தௌச் சேர்ந்த தலைமை டிக்கெட் பரிசோதகரான எஸ்.நந்த குமார் 27,787 வழக்குகளை பதிவு செய்து ரூ.1 கோடியே 55 இலட்சம் அபராதத் தொகையை வசூலித்துள்ளார்.

பெண் டிக்கெட் பரிசோதகர் சாதனை

இதேபோல, சென்னை கோட்டத்தைச் சேர்ந்த தலைமை டிக்கெட் பரிசோதகரான ரோசலின் ஆரோக்கிய மேரி ரூ.1 கோடியே 3 லட்சம் அபராதத் தொகையை வசூலித்து சாதனை படைத்துள்ளார். இந்தியன இரயில்வேயில் முதன் முறையாக அதிக அபராதத் தொகையை வசூலித்த பெண் டிக்கெட் பரிசோதகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும், கூடைப் பந்தாட்ட வீரரும், முதுநிலை டிக்கெட் பரிசோதகருமான சக்திவேல் ரூ.1 கோடியே 10 லட்சம் அபராதத் தொகையை வசூலித்து உள்ளதாக தெற்கு இரயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்து உள்ளது.

இரயிலில் பயணம் செய்பவர்கள், பயணச் சீட்டு எடுப்பது தான் முறையான பயணமாகும். பயணச் சீட்டு இல்லாத பயணம், முறையற்ற பயணமாகும். இவர்களைப் போன்றவர்களுக்கு டிக்கெட் பரிசோதகர்கள் தான் நல்ல பாடத்தை கற்பிப்பார்கள்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version