சினிமா
சூர்யா ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பியான என்ஜிகே அப்டேட்!
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தீபாவளிக்கு வருமென அறிவிக்கப்பட்ட சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் பொங்கலுக்கும் ரிலீஸ் இல்லை என்பது சூர்யா ரசிகர்களை மிகவும் அதிருப்தியடைய செய்துள்ளது. மேலும், படத்தில் இருந்து எந்தவொரு அப்டேட்டும் வராதது அவர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் படத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுவதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ரசிகர்களை சற்று தேற்றினார். தற்போது, மீண்டும் ஒரு அறிவிப்பை அளித்து அவர்களை உற்சாகமடைய செய்துள்ளார்.
படத்தின் ஆடியோ உரிமையை இந்தியாவின் பிரபல நிறுவனமான சோனி கைப்பற்றியுள்ளது.
யுவனின் இசையில் வெளியிடப்பட்டுள்ள தீம் மியூசிக் வேற லெவல்.