இந்தியா

இந்தியாவில் உள்ள 3700 அணைகளுக்கு ஆபத்து.. ஐநா எச்சரிக்கையால் பரபரப்பு!

Published

on

இந்தியாவிலுள்ள 3700 அணைக்கு ஆபத்து என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவிலிருக்கும் 3,700 அணைகள் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத நீரைத் தேக்கும் திறனை இழந்து விடும் என்றும் வண்டல் மண் கலப்பினால் இந்த ஆபத்து வர வாய்ப்பிருப்பதாகவும் ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

50 ஆண்டுக்கு மேலான பழமையான அணைகள் தனது நீரை நிறுத்தும் அளவில் 30 சதவீத இழந்துவிடும் என்று கூறியுள்ள ஐநா, உலகம் முழுவதும் வண்டல் மண் பிரச்சனை காரணமாக சுமார் 50 ஆயிரம் அணைகள் தங்களது நீர்த்தேக்க அளவை 13 முதல் 19 சதவீதம் வரை இழந்துவிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

ஐநாவுடன் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மைய பல்கலைக்கழகம் இது குறித்து நடத்திய ஆய்வில் உலக அளவில் இருக்கும் அணைகளின் எதிர்காலம் பற்றி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் பெரிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவதை ஒரு பகுதியாக செயல்படுகின்றன என்றும் இந்த நீர்த்தேக்க அளவு ஒரே நேரத்தில் பாதிக்கும் வகையில் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 3,700 அணைகள் மொத்த சேமிப்பில் 26 சதவீதத்தை இழக்கும், இது எதிர்காலத்தில் நீர் பாதுகாப்பு, நீர்ப்பாசனம் மற்றும் மின் உற்பத்தியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வண்டல்களின் குவிப்பு காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையின் புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.

நீர், சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியம் பற்றிய ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, 150 நாடுகளில் உள்ள 47,403 பெரிய அணைகளில் 6,316 பில்லியன் கன மீட்டர் நீர் சேமிப்பு அளவு குறையும் என்றும், 4,665 பில்லியன் கியூபிக் மீட்டர், 2050ல் 26 சதவீத சேமிப்பு இழப்பை ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி சீனா, இந்தோனேசியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் அணைகளின் நீர்த்தேக்க அளவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும், அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டில், ஆசிய-பசிபிக் பகுதி மற்றும் உலகின் அதிக சேமிப்புத் திறனில் 13 சதவீதத்தை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி உலக மக்கள்தொகையில் 60 சதவீதத்தை கொண்டுள்ளதால் நீர் மற்றும் உணவு பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கு நீர் சேமிப்பு முக்கியமானது என்றும், அந்த ஆய்வு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவின் 3,700 பெரிய அணைகள் 2050 ஆம் ஆண்டுக்குள் அவற்றின் ஆரம்ப மொத்த சேமிப்பில் சராசரியாக 26 சதவீதத்தை இழந்துவிடும் என்று கூறியுள்ள ஐநா, இந்தியா மட்டுமின்றி உலகின் அதிக அணைகள் உள்ள நாடான சீனாவில் உள்ள அணைகளும் 2050 ஆம் ஆண்டில் 10 சதவீத நீர்த்தேக்கத்தை இழக்கும் என்று கூறியுள்ளது.

நீர் சேமிப்பு உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியமானது என்பதால் பெரிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நீர்மின்சாரம், வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசன முறைகளை சீர்செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக வண்டல் மண் குவிப்பை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும், அந்த ஆய்வு முடிவு அறிவுறுத்தியுளது.

seithichurul

Trending

Exit mobile version