உலகம்

ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி: இந்தியா காரணமா?

Published

on

ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்யா அதிபர் புதின் சமீபத்தில் உத்தரவிட்டார் என்பதும் கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத்தினர் குண்டு மழை பெய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையும் விதித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா உள்பட 11 நாடுகள் ஐநாவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது. இந்த மூன்று நாடுகளும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்ததால் தீர்மானம் வெற்றி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version