கிரிக்கெட்

சர்ச்சைக்குரிய LBW அவுட்: நடுவர் மீது விராத் கோஹ்லி ரசிகர்கள் பாய்ச்சல்!

Published

on

மும்பையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் எல்பிடபிள்யூ கொடுத்து விராட் கோலிக்கு அவுட் கொடுத்த நடுவர் மீது அவரது ரசிகர்கள் பாய்ச்சல் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் களமிறங்கைனர். இந்த நிலையில் கில் 44 ரன்களும், புஜாரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி நிலையில் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.

அவர் சந்தித்த நான்காவது வயதிலேயே எல்பிடபிள்யூ அவுட் கொடுத்தார் நடுவர். ஆனால் ரிவ்யூ செய்ததில் முதலில் பந்து பேட்டில் படுவது தெளிவாக தெரிந்தது. இந்த நிலையில் விராத் கோலிக்கு கள நடுவர் அவுட் கொடுத்ததற்கு விராத் கோஹ்லி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற முக்கியமான போட்டியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவுட் கொடுக்காமல் ஏனோதானோ என்று முடிவெடுப்பது ஆட்டத்தின் போக்கையே மாற்றி விடும் என்றும் நடுவர்கள் திறன் மீது சந்தேகம் எழும் என்றும் காரசாரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மும்பை டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்கு சர்ச்சைக்குரிய வகையில் எல்பிடபிள்யூ முறையில் ரன் ஏதும் எடுக்காமலேயே வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version